Tuesday 7th of May 2024 09:17:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழ் போராட்டக்காரர்கள் மீதான லண்டன் பொலிஸாரின் தாக்குதல் -ஹரி ஆனந்தசங்கரி விமர்சனம்!

தமிழ் போராட்டக்காரர்கள் மீதான லண்டன் பொலிஸாரின் தாக்குதல் -ஹரி ஆனந்தசங்கரி விமர்சனம்!


லண்டனில் - ஈழத் தமிழ்-பிரித்தானிய பெண் அம்பிகை செல்வகுமார் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாகத் திரண்ட தமிழர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கின்றன என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக திரண்டவர்களுக்கு எதிராக லண்டன் பொலிஸார் தமது பலத்தை பிரயோகித்துள்ளமையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளமையும் வருத்தமளிக்கிறது எனவும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கனடா - ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் விஜய் தனிகாசலமும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அமைதியான போராட்டங்கள் அவர்கள் இலங்கையில் சந்தித்த பெரும் துயரங்களின் பிரதிபலிப்பு என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இந்நிலையில் அம்பிக்கை செல்வகுமாரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரித்தானிய அரசாங்கத்துடன் இணைந்து கனடா செயலாற்ற வேண்டும் எனவும் விஜய் தணிகாசலம் அழைப்பு விடுத்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE